
இன்று திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் மேல நாக மங்கலத்தில் ஊராட்சி உள்ள சில்ட்ரன் சாட்டபிள் டிரஸ்ட் சார்பாக நடத்தப்பட்டு இருக்கும் இலவச கல்வி கற்கை மையம் சார்பாக இன்று சமத்துவ பொங்கல் விழாவானது நடைபெற்றது.

இந்த பொங்கல் விழாவானது காலையில் முதல் இரவு வரை நடைபெற்றது இந்த நிகழ்ச்சியானது தொடர் நிகழ்ச்சியாக காலை முதல் குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகளும் பெரியவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டது. இறுதியாக மாலை 5 மணிக்கு சமத்துவ பொங்கல் விழாவை நிறைவு கொண்டாட்டமாக சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் மேல நாகமங்கலம்கலை நிகழ்ச்சிகளோட விழாவானது நடைபெற்றது.
இதில் வரவேற்புரை திரு ராபின்சன் திவாகரன் சில்ட்ரன் டேபிள் டிரஸ்ட் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அவர்கள் வழங்கினார். தலைமை உரையாக ஊராட்சி மன்ற தலைவர் திரு வெள்ளைச்சாமி அவர்கள் தலைமை உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் நடனம் ஆடினர் பேச்சுப்போட்டி ஓவிய போட்டி நடன போட்டி ,ஸ்லோ சைக்கிள் ரேஸ், லெமன் வித் ஸ்கூல், கோலப்போட்டி ,போன்ற பல போட்டிகள் நடத்தப்பட்டு அதற்காக பரிசுகள் வழங்கப்பட்டனகுழந்தைகள் அனைவரும் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பு பரிசு பெற்று கொண்டு மகிழ்ச்சி இனிதாக மகிழ்ச்சியாக நிறைவு பெற்றது.

இதில் சுமார் 150 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஒருங்கிணைப்பு செய்ததுசில்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் திரு ராபின்சன் மற்றும் இலவச கல்வி கற்கை மைய ஆசிரியை திருமதி. ஹேமலதா.















