திருச்சிராப்பள்ளி, இலால்குடி கம்பன் கழகம், 2ஆம் மாத கூட்டம், இலால்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று 14.12.2024 மாலை நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் மேனாள் ஆசிரியை, எல்.என்.பி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இலால்குடி, திருமதி வ. மாதவி தலைமை தாங்கினார்.



அஷ்டலெட்சுமி மோட்டார் பைனான்ஸ், லால்குடி திரு த. சந்திரமோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், இலால்குடி, திரு தி. சுரேஷ்குமார் ஆகியோர்


சிறப்பு அழைப்பாளர்கள் ஆவர். செல்வி ஜோ. காயத்ரி, அவர்களின் “கம்பனில் இராமன்” என்ற தலைப்பில் மாணவர் உரையாற்றினார்.


நற்றமிழ் நாவரசி முனைவர் நா சாத்தம்மைபிரியா, கம்பன்- அன்றும், இன்றும், என்றும், என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சென்னை, மணி பொன்னுசாமி(எ) கே பழனியம்மாள், இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இரவு உணவு அன்பளிப்பாக வழங்கி மகிழ்ந்தார்.
இந்நிகழ்ச்சியில் செள. இளஞ்செழியன் தலைவர், து. ஜோதி ரவி செயலாளர், த. முருகானந்தம் பொருளாளர், அ. அன்பழகன் துணைச் செயலாளர், ந. திருநாவுக்கரசு இணைச் செயலாளர், திருச்சிராப்பள்ளி வாசகர் வட்டம் தலைவர் கவிஞர் வீ. கோவிந்தசாமி,
திரு இளஞ்சேட்சென்னி,
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,
இல்லம் தேடிக் கல்வித் திட்டம்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம். எஸ். செவிலி, திருச்சி தூய வளனார் கல்லூரி, தமிழ்த்துறை பேராசிரியர் திரு எழில் செல்வன்,
தமிழ்ச் சான்றோர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

