திருக்குறள் மொத்தம் 1330 என்று ஏன் ஒருமையில் சொல்கிறார்கள்?
திருக்குறள்கள் என்று ஏன் பன்மையில்
இல்லை?
1330 குறள்கள் என்று ஏன் சொல்வதில்லை ?
பதில் :
எண் ஒன்றைத் தவிர எல்லா எண்களுமே பன்மையைக் குறிக்கும்.
உ.தா :
ஈரடி – இரண்டு பன்மை .. இதில் கள் சேர்க்கத் தேவையில்லை.
முப்பால் – மூன்று .. பன்மை,
நான்மறை – நான்கு பன்மை
ஐந்திணை – ஐந்து பன்மை ஆறுபடை ஏழ்கடல் எண்திசை இவையாவும் பன்மையைக் குறிக்கும், தனியே “கள்” சேர்க்கத் தேவையில்லை.
முப்பால் : அறம் பொருள் இன்பம்
இவற்றிற்குப் பின் “கள்” வராது.
நால்திசை : கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு இவற்றிற்குப் பின் “கள்” வராது.
ஐந்திணை : குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை இவற்றிற்குப் பின் “கள்” வராது,

ஐம்பூதம் : வான் நிலம் நீர் காற்று நெருப்பு இவற்றிற்குப் பின் “கள்” வராது.
(தொல்காப்பியம் நன்னூலில் கள் விகுதி உபயோகப்படுத்தப்படவில்லை.
கண் கலங்கின என்பர், கண்கள் கலங்கின என்பது பிற்காலத்தில் புழக்கத்தில் வந்தது,
ஆடு மேய்ந்தன .. ஆடு ஒருமை
மேய்ந்தன பன்மை, இவ்வாறாகத்தான் கள் விகுதி இல்லாமலே இருந்தது)
அதனால் திருக்குறள் என்பதே சரி,
1330 குறள் என்பதே சரி .. குறள்கள் எனத் தனியே “கள்” சேர்க்கத் தேவையில்லை.